பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம்

முன்னுரை:

‘என்னுடைய கவிதை உலகத்தைச் சேர்ந்தவர்"என்று பாரதியாரால் அறிமுகப் படுத்தப்பட்ட பாரதி தாசன் புரட்சிக்கவிஞர்’ என்று பாராட்டப்படுகின்றார், பாரதியார் பழமையைப் புதுமையோடு பாடினர், பாரதிதாசன் புதுமையைப் புரட்சியோடு பாடினர்: பாவேந்தரின் பாடல்களில் சொல்லாறு பாயும்; பொருளாறு விரிந்தோடும்; உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும். காட்டாறு போன்று, புரட்சிக் கருத்துகளைத் தமது பாடல் களில் அள்ளி வீசியிருக்கிரு.ர். இவரது கற்பனைகள் உள்ளத்து உணர்ச்சிகளையும் எழுச்சிகளையும் கொப்பளிக்கச் செய்யும் நீரூற்றுகள். இவற்றைச் சான்றுகளின் மூலம் இக்கட்டுரையில் காண்போம்.

உணர்ச்சி:

பாரதியாரைப் பொறுத்தவரையில் உணர்ச்சி மிக்க வராய் இருந்த போதிலும், சிந்தனைச் சிற்பி ஒருவரிடம் காணப்படும் ஒரு வகையான பொது நோக்கமே அவரிடம் காணக் கூடியதாயிருக்கிறது. எடுத்துக் காட்டாக,