பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 143.

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே இயந்திரங்கள் வகுத்திடுவிரே -

என்ற பாடலை எடுத்துக்கொண்டால், இப்பாடல் தொழிலாளரைப் பற்றிப் பொதுப்படவே பேசுகிறது; ஆல்ை பாரதிதாசன் சமுதாயத்தில் ஏழை எளிய மக்களான உழவர்கள், வண்டிக்காரன், மாடு மேய்ப்பவன், உழைப் பாளி, பூக்காரி போன்றவர்களை இதய பீடத்தில் ஏற்றிக் கவிதையில் வடிக்கின்றார்.

பாவேந்தரின் பாடல்களில் அவருடைய சொந்த உணர்ச்சியை வெளிப்படுத்துகிறபொழுது அழகுணர்ச்சியே மிகுந்து நிற்கின்றது. அதுபோன்றே பாடல் மாந்தரின் உணர்ச்சி வெளியீட்டில் காதலுணர்ச்சி மிக்கு இருக்கிறது எனலாம்.

அவல உணர்ச்சி:

சமூகக் கொடுமைக்கு இலக்காகி அல்லற்படுவோரை, அன்போடும் பாசத்தோடும் நோக்கி, அவர்தம் கிலேயி ஆன உணர்த்துமுகமாகப் பாரதிதாசன் பாடிய பாடல்கள் உருக்கமானவை.

கங்தை யணிந்தோம் - இரு

கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம் மொந்தையிற் கூழைப் - பலர்

மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம் சந்தையில் மாடாய் - யாம்

சந்ததம் தங்கிட வீடுமில்லாமல சிங்தை மெலிந்தோம் எங்கள்

சேவைக்கெ லாம்.இது செய்நன்றி தானே ? .

என்று தொழிலாளர் விண்ணப்பத்தைத் தானும் ஒரு தொழிலாளியாய் கின்று சமூகத்தின் முன் வைக்கின் ருர்.