பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நெஞ்சின் கினைவுகள்

கணவன் இறந்து விட்டதால் கைம்மைத் துயருக்குள் வாான இளம்பெண்ணைக் கண்ட பாரதிதாசன்,

  • கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு

வேரிற் பழுத்த பலா - மிகக் கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர் வடிக்கின்ற வட்ட கிலா

என்று பணிவுடன் பாடுவதை நோக்கக் கைம்பெண்ணின் அபெல கிலேயைச் சொற்களால் அப்படியே படம் பிடித்தலைக் காணலாம்.

காதலைச் சமுதாயம் வெறுத்ததன் மூலம் காதலர்கள் கருதியதை,

‘சீராளன் தாவினன்: வீழ்ந்தாள் - வீழ்ந்தான்

தேம்பிற்று பெண்ணுலகு: இருவர் தீர்ந்தார் என்று காதலைத் தீய்த்த கட்டுப்பாடு’ என்ற தலைப்பின் இறுதியில் காதலர்களுக்கு இரங்கிப் பாடுகின்றார்.

நகைச்சுவை

உள்ளத்து அயர்ச்சியை நீக்க மலர்ச்சியைத் தருவது நகைச்சுவை. இத்தகைய நகைச்சுவை கவிஞர்களிடையே அமைவது கடினம். சிலரே நகைச்சுவையோடு கருத்துகளை நயமாக வெளிப்படுத்துவார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் பாரதிதாசன்.

படிப்போரைச் சிரிப்புக் கடலில் மூழ்க வைக்கும் அடி களாகக் குடும்ப விளக்கில்”,

இவைகளின் உச்சி மீதில் குன்றுமேல் குரங்கு போல என்றனைக் குந்த வைத்தார்