பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 14五、

என்தலை நிமிர வண்டி மூடிமேல் பொத்த விட்டார் உன்மாமன் நடந்து வந்தார் ஊரெல்லாம் சிரித்த தென்றாள்

என்கிறபோது ஊரெல்லாம் சிரித்ததோடு நம்மையும். சிரிக்க வைக்கின்றார்.

குரங்கின் அச்சத்தை நகைச்சுவையுடன்

கிளையினிற் பாம்பு தொங்க

விழுதென்று , குரங்கு தொட்டு * விளக்கினைத் தொட்ட பிள்ளை

வெடுக்கெனக் குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி

உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

என்று கவிநயத்துடன் அழகின் சிரிப்பில் கூறி கம்மையும் சிரிக்க வைக்கின்றார்.

பாண்டியன் பரிசில் பொன்னப்பன் என்ற பாத்திரப் படைப்பின் மூலம் நகைச் சுவையுடன் இனிய கருத்துகளை கவில்கின்றார்.

மணந்து கொண்டால் என்னிடமே இருக்கவேண்டும் மரியாதையாய் நடந்து கொள்ள வேண்டும் பிணம்போல எப்போதும் துரங்க வேண்டாம் பிச்சைக்காரர் வந்தால் அரிசிபோடு: பணம்போடு : குறைந்துவிடப் போவதில்லை பாலினிக்கும் நம்வீட்டில் மோர் புளிக்கும் துணிந்து நிற்பாய் என்னேடு திருடர் வந்தால் சுருக்கமென்ன முகத்திலே இதெல்லாம் வேண்டாம்