பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈46 நெஞ்சின் கினைவுகள்

என்ற அடிகளைக் காணும்போது ஒர் அசட்டு ஆண் மகளுகப்பொன்னப்பனைப் படைத்து, அவன்மூலம் கம்மைச் -சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றார்.

விரச்சுவை

‘சங்கம் தோற்கும் நடையை உடையவர் பாரதிதாசன்’ என அவரோடு பழகியவர்களும் பார்த்தவர்களும் கூறுவார் கள். அவரது நடையில் மட்டுமல்ல வீரம். அவரது கவிதை கடையிலும் இந்த வீரத்தைக் காணலாம். இவரது கவிதை கள் சாதாரணப் பொதுமக்கள் புரிந்து கொள்ளக் கூடிய கடையில் அழகும் வலுவும் வாய்ந்த சொற்களைப் பயின்று உணர்ச்சி வேகத்தோடு இருப்பதைக் காணலாம். -

  • பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் கிசமென்று சங்கே முழங்கு ’ என்றும்

“ தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ ன என்

தாய் தடுத் தாலும் விடேன். ‘

என்றும் கூறுவதை நோக்க கம் கவிஞரின் மொழிப்பற்று வீர ஆவேசத்துடன் வெளிவருவதைக் காணலாம்.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழ,

  • பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு

திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில்வா ’ என அழைக்கின்றபோது வீரத்தின் வேகத்தைக் காணலாம்.

கொடுமையை எதிர்த்துப் போராடுவதிலே சாவு

வருமேயானல் அந்தப் போர்க்களத்தில் என் தோள்கள் விளையாடும் என்று கூறும்பொழுது,