பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 147

  • வெங்கொடுமைச் சாக்காட்டில்

விளையாடும்தோள் எங்கள் வெற்றித் தோள்கள் : என்கின்றார்,

தீமையைக் காணும்பொழுது உள்ளம் கொதித்து எழும் கவியின் உள்ளம் வீரம் செறிந்த கவிதையின் வழி வெளிப்படுகிறது.

அகத்தே தோன்றும் உணர்ச்சியைக் கவிதையில்

வடிக்கும் திறம் தொல்காப்பியனர் புகுமுகம் புரிதல் பொறிதுதல் வியர்த்தல்’ என்பது முதல், ஆறு நூற்பாக்கள் அக உணர்ச்சியினல் ஏற்படும் மெய்ப்பாடுகளைக் காட்டுகின்றார். இம்மெய்ப்பாடுகளை எதிர்பாராத முத்தத் தில் பொன்முடி பூங்கோதை சந்திக்கும் நிகழ்ச்சியின் மூலம் காட்டுகின்றார்,

“ என்விழிகள் அவ்விழியைச் சந்திக்குங்கால்

என்னவிதம் நடப்ப தென யோசிப்பாள் பெண்; ஒன்றுமே தோன்றவில்லை ; கிமிர்ந்தே அன்னேன் ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள் ; குனிந்து கொள்வாள்; சின்னவிழி ஒளிபெருகும்: இதழ்சிரிக்கும்: திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள் ‘ இங்கே தொல்காப்பிய மெய்ப்பாடும், வள்ளுவன் கலையும் இணைகின்றன. இங்கே இயற்கையின் நாணம், கூச்சம், புதிய மனநெகிழ்ச்சியால் ஏற்படும் ஒருவிதத் தடுமாற்றம் ஆகிய அனைத்தும் கவிதையில் சிறக்கக் காணலாம்.

“ ------------------------ சின்னவிழி

முத்தாரம் பாய்ச்ச உதட்டின் முனைகடுங்க வித்தார லோகம் விலவிலக்க - அத்தானின் பொன்னுடம்பில் தன்னுடம்பை போர்த்தபடி

இருந்தாள்'