பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலக்தோறும் கன்னித்தமிழ் 13

முன்னேர் கண்ட நெறியாகும். எனவே தொல் காப்பியத்திற்கு முன் தமிழில் இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டுமென்றும், அவ்விலக்கியங்களே மனத்தில் எண்ணி யே தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்ை சில வரையறைகளின் விதிகளை வகுத்திருக்க வேண்டும் என்றும் புலகைக் காணலாம். அது மட்டுமன்றித் தொல் காப்பியத்திற்கு முன் தமிழில் இலக்கண நூலும் இருந் திருக்க வேண்டும் என்பதனையும் தொல்காப்பியர்ை தம் நூலிற் பலவிடங்களில் என்மனர் புலவர்’, ‘என்ப”, ‘நூலிறி புலவர்’ என்றெல்லாம் குறிப்பிடுவதனின்றும் அறியலாம்.

ஆங்கிலப் பேராசிரியர் அறிஞர் பூர்ணலிங்கம் பிள்ளே அவர்கள், ‘காதலும் போரும் பழந்தமிழ் இலக்கியத்தின் கருப்பொருள்களாகவும், சமயமும் தத்துவமும் இடைக்

கால இலக்கியங்களின் பாடுபொருள்களாகவும், அறிவி யலும், மானிடவியலும் இக்கால இலக்கியங்களின் பிழிவாகவும் உள்ளன’ என்று குறிப்பிட்டிருப்பது

தமிழிலக்கியப் பரப்பினை வானத்திலிருந்து ஒரு புள் நோக்காகப் பார்த்த ( Bird’s eye view ) பொருத்தமான பார்வை எனலாம்.

சங்க இலக்கியம் அகத்தையும் புறத்தையும் பற்றிஅதாவது காதலையும் வீரத்தையும் பற்றிப் பாடுகின்றது. முதலாவதாக, இலக்கியமாகத் தமிழர் வாழ்ந்த மண்ணே நானிலம் என்று பிரித்துக் கண்டது. மலையும் மலேயைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடலேச் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் கூறப்பட்டன மழையின்மை காரணமாகக் குறிஞ்சி நிலமும் முல்லை கிலமும் காங்கள்