பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நெஞ்சின் கினைவுகள்

கருத்து விளக்கக் கற்பனை

புரட்சிக் கவிஞரின் பாடல்கள் மிகப் பலவும் அவரது எண்ணங்களையும் அழகுணர்ச்சியையும் வெளிப் படுத்துவனவாக உள்ளன. கிறைந்த பாடல்கள் கருத்து களேயே உயிர்காடியாகக் கொண்டு படைக்கப்பட்டிருத் தலைக் காணலாம். குறை கிறைந்த குள்ள சமுதாயத்திற்குக் கவிதை வழி, இனிப்பு மருந்தினைக் கொடுக்கின்றார். வெறும் கருத்துகள் கிறைந்த பாடல்கள், கசப்பு மருந்து போன்றவை யாகும். கவிஞர் இதை உணர்ந்து கவிச்சுவையுடன் கருத்தினை நல்குகின்றார்.

வானத்தில் விண்மீன்கள் அழகாகப் பூத்து இருக் கின்றன. உலகில் உரிமையின்றி மேலோர் இழோர் என்ற சமுக்கர்களின் (கசடர்களின்) பாகுபாட்டால் நாளெல்லாம் வருங்துகின்றனர் உழைப்பாளர்கள்.

இவ்விரு நிகழ்ச்சிகளையும் இணைத்துத்தம் கருத்தையும் விளக்கிக் கற்பனை கயத்துடன் காட்டி விடுகின்றார் கவிஞர்.

மண் மீதில் உழைப்பா ரெல்லாம் வறியராம்! உரிமை கேட்டால் புண் மீதில் அம்பு பாய்ச்சும் புலையர்செல் வராம் இதைத்தன் கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண் டங் திக் குப்பின் விண்மீளுய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி! :

தொழிலாளர் படும் துயரங்களைப் பகலில் வானம் தன் கண் கொண்டு கண்டு அக்திக்குப் பின் விண்மீனுய்க் கொப்பளித்

ததாம்.