பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 151

குன்றில் மஞ்சு சூழ்ந்திருக்கும் காட்சி அடிமை நெஞ்சம் புகைதல் போல் இருக்கிறதாம்.

“ ... அடிமை நெஞ்சம்

புகைதல் போல் தோன்றும் குன்றம்

என்கின்ற போது அடிமையின் நெஞ்சத்திற்கும் ஒப்புமை காட்டித் தம் கருத்தை விளக்குகின்றார்.

நிகழ்ச்சிக் கற்பனை

இயற்கை ஈடுபாடு மிக்கவர் பாவேந்தர். இதற்குச் சான்றாக இவர் படைத்த அழகின் சிரிப்பு நூல் ஒன்றே போதும். இயற்கைக் காட்சிகளே இவர் மனக்கண் மூலம் கற்பனை நிகழ்ச்சிகளாகக் காட்டும்போது கவிதை மேலும் சுவையூட்டுவதைக் காணலாம்.

தென்றலின் குறும்பினைப் பற்றிய கற்பனையில் ‘பெண்கள் விலக்காத ஆடையைத் தென்றல் விலக்கிலுைம் தென்றலைப் பெண்கள் விலக்கமாட்டார்கள்’ என்று பாடு ன்ெருர்.

பெண்கள் விலக்காத உடையை நீ போய் விலக்கினும் , விலக்கார் உன்னை ’

என்கின்றார். ஆலமரத்தினில் காற்று மோதுகின்றபொழுது நிகழும் நிகழ்ச்சியினைக் கவிஞர் கற்பனை செய்வது கண்ணுக்கும் விருந்தளிக்கின்றது.

ஆலினைக் காற்று மோதும்; அசைவனே எனச் சிரித்துக் கோலத்துக் கிளை குலுங்க அடிமரக் குன்று நிற்கும்: