பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 」53

ஒடத்தில் ஏறி, மாவலிபுரம் நோக்கிச் செல்லுகின்ற

போது கவிஞரின் கற்பனை விரிந்தோடுகிறது. நிலவு ஒரு மரத்தருகே தோன்றும் காட்சி, ஒட்டகத்தின் மீது அரசன் இருந்தது போலிருந்தது அவருக்கு.

ஒட்டக மேல் அரசன்போல் - மதி

ஓர்மரத் தண்டையில் தோன்றும் என்கிரு.ர். கிளி ஒன்று கனிங் க, சிவந்த கோவைக்கனி ஒன்றைத் தன் கூரிய அலகால் கொத்துகின்றது. இக்காட்சி யைக் கவிஞர் காணுகின்றார். உடனே கற்பனேக் கண் கொண்டு,

விளக்கினில் விளக்கை ஏற்றிச் செல்லல் போல் சென்றாய்

என்று கவிஞர் சுடர்களின் செம்மை-கூர்மை இவற்றைக் கிளியின் அலகுக்கும் கோவைக்கனிக்கும் ஒப்புமைப் படுத்திப் பொருத்தமுடன் கூறுகிரு.ர்.

மேற்கூறிய உவமைகள் பாரதிதாசன் கையாளும் புதுமையான சிறந்த உவமைகளுக்குப் போதிய எடுத்துக் காட்டுகளாக அமையும்.

உருவகம்

“உவமையாம் பொருளையும் உவமிக்கப்படும் பொருளே யும் வேறுபாடு ஒழித்து ஒன்று என்பதோர் உள்ளுணர்வு தோன்ற ஒற்றுமைக் கொளுத்தின் அஃது உருவகம் என்னும் அலங்காரமாம்’ என்று உருவகம் பற்றித் தண்டி பலங்கார உரைகாரர் ஆன சுப்பிரமணிய தேசிகர் கூறு ன்ெருர்.

‘அடக்கிச் செறிந்த உவமையே உருவகம் என்கிறார்

•og ø6 (Poetry and the ordinary Reader-Page 69).