பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நெஞ்சின் நினைவுக

எனவே உவமைக்கும் உருவகத்திற்கும் இடைே உள்ள சிறந்த வேறுபாடானது, உவமிக்கும் பொருளும் உவமிக்கப் படுதற்குக் காரணமான பொருளும் ஒன்றாகக் காண்பது ஆகும்.

பாவேந்தர் உவமையை மிகுதியாகத் தம் கவிதைகளில் படைத்தளித்தலைப் போல உருவகத்தையும் படைத்துக் கவிதைக்கு மேலும் எழிலூட்டுகின்றார்.

மயில் போல் சாயலாள் என்று உவமிப்பது மரபு. கம் கவிஞர்,

தோகை மயில் ‘

  • பச்சை மயில் * மட மயில்

என்றெல்லாம் பெண்களை உருவகப்படுத்திக் காண்கின்றார்.

தமிழ் இலக்கியங்களில் மெல்லியலாரின் நடைக்கு அன்னத்தின் நடையை ஒப்புமை காட்டுதல் மரபு. அதுபோலவே கவிஞரும் பெண்களை நடையினில் அன்னம்’ (ம. வெ. ப. 63) என்று உருவகிக்கின் ருர்.

“கல்வியில்லாத பெண்கள் களர்ங்லம்’ என்கிறபோது கல்லாத பெண்களைக் களர்கிலமாக உருவகிக்கின்றார்.

அருவிகள் வயிரத் தொங்கல் ! அடர்கொடி , பச்சைப் பட்டே ! குருவிகள் , தங்கக் கட்டி ! குளிர்மலர் மணியின் குப்பை எருதின்மேற் பாயும் வேங்கை நிலவுமேல் எழுந்த மின்னல் சருகெலாம் ஒளிசேர் தங்கத் தகடுகள் பாரடாநீ

என்ற பாடலில் இயற்கையைத் தொடர்ந்து உருவகித்துச்! செல்லும் இனிமையைக் காணலாம்.