பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் I55

|

தலைவியின் வரவு நோக்கி இருக்கும் தலைவனின்

எண்ண ஓட்டத்திலும் உருவகத்தினைப் புகுத்துகின்றார்.

தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி தலைமூழ்க மறந்தானே. இருள் என்னும் யானை

\ செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவரவில்லையோ “

- (கா. கி. பக். 13)

\ இது போன்ற அழகிய உருவகங்களைக் கூறுவதற்குப் பாவேந்தர் இயற்கையை ஒரு மொழியாகவே கையாளு கின்ற தன்மையினைக் காணலாம்.

சொல்லாட்சி

“இழும் எனும் ஒலியால் விழுமியது துவலல்’ கவிதையின் இலக்கணம். கற்பனை, உணர்ச்சி எவ்வாறு கவிதைக்குச் சிறந்தனவோ அவ்வாறே கையாளும் சொற் களும் விழுமிய சொற்களாக இருத்தல் வேண்டும்.

கற்போருக்கு உணர்வினையும் சுவையினையும் ஊட்டும் சொற்களைப் புரட்சிக்கவிஞர் படைத்திருத்தலை அவர் கவிதைகளில் காணலாம்.

முல்லை மலரும் காட்சியை,

குலுக்கென்று சிரித்த முல்லை :

என்கின்றார். பெண்கள் சிரிப்பதை முல்லைச் சிரிப்பெனக் கூறுதலால் முல்லையின் சிரிப்புக்கும் ஒசையினைக் கொடுக் கின்றார் ‘குலுக்கென்று’ என்ற சொல்லின் மூலம்.

பாரதிதாசன் படைத்த தலைவன், தலைவியைப் பற்றின் கூறுகின்றான்:

‘தென்னம்பாளேச் சிரிப்பாலே தின்னுவாளே என்.ஆவி’ என்கின்றபோது நிரல்படத் தெரிகின்ற தென்னம்பாஆள