பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நெஞ்சின் நினைவுகள்

மலர்ச்சியினை, பெண்ணின் சிரிப்புக்கு இயைபுபடுத்திக் காட்டுகின்றார். தென்னம்பாளேச் சிரிப்பால் ஆவியைத் தின்றாள் என்று கூறும்பொழுது தின்னுதல்’ என்பது உண்ணுதல், சாப்பிடுதல் இவற்றினின்று வேறுபட்டு மென்று தின்பதைக் குறிக்கிறது. ஆவியை மென்று தின்பது | போன்று இருந்ததாம் தலைவியின் சிரிப்பு. தலைவியின், சிரிப்பாற்றலை இதைவிடச் சிறப்பாகக் கூறமுடியுமா?

  • இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி ‘’

-ப. க. 1

இங்குக் கதிரவல்ை இருள் விலகுகிறது என்ற கருத்தை விளக்கும்பொழுது கவிஞரின் இயல்பான குணத்திற்கு ஏற்ப எழுச்சியுள்ள சொற்களும் இயல்பாகவே அவர் கவிதையில் அமைந்து விடுவதை இருட் கதவை'-என்று கூறும் தொடரிலேயே உணரலாம்.

அடைவளம்

கவிஞர்களுக்கு எதையும் கூர்ந்து நோக்கி உணரும் தன்மை மிகுந்து இருக்க வேண்டும். இதனேக் கூர்மை Gismá G (Keen observation) grs5rLir. @ÚGLJ r&$&*& சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு அடைத் தொடர்களேக் கவிஞர்கள் பயன்படுத்துகின்றனர்.

குன்றத்தைக் காண்கிறார் கவிஞர். அதன் தோற்றத்தை ஒரே தொடரில்,

செங்குத்தாய் உயர்ந்த குன்றின் எனக் காட்டி, இரண்டு அடைகளின்மூலம் நெடிய, உயர்ந்த குன்றத்தினைக் கண்முன் கொண்டு வருகின்றார்.

புதிய சிந்தனைகளை ஏற்று, பழைய போக்குகளே மாற்றி அமைத்துக்கொள்ள விரும்பாத சமூகத்தைக்