பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் I57

காண்கிறார் கவிஞர். இதனை விளக்கக் குள்ள என்ற அடை கொடுத்துக் குள்ளச் சமூகம்’ என்று கூறுகிரு.ர். மனிதாபிமானம் அற்ற சமுதாயம் குள்ளச் சமுதாயமே என்கிறது கவிஞர் உள்ளம்.

கதிரவன விரி கதிர்ச் செல்வன்’ என்கிறார். கோவைப் பழத்தை, பளிச்சென எரியும் கோவை’ என்கின்றபோது செம்மை நிறப் பழத்தின் ஒளி அடைத்தொடர்வழி சிறப்பிக்கப்படுகிறது.

வேங்கையைக் கூற வருமிடத்து அதன் வலிமையைக் காட்ட விரும்பும் கவிஞர்

“ ... கூர்

வாளெயிற்று வேங்கை ”

என்று கூறுகின் ருர்.

காதலரைப் பிரிக்கும் பெற்றாேரைக் குட்டை மனம் கொண்டோர் என்று குறிப்பிடுகின்றார். சிறு அடைத் தொடர்வழி, கவிஞர் தம் சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கும் திறமும், கருத்துகளை அச் சிறு அடைத்தொடரி லேயே காட்டி விடும் சிறப்பினையும் ஒருங்கே கண்டு மகிழலாம்.

நடை

“ஒரு காவியத்தையோ கதையையோ படிக்கும் போதும், நாம் வாய்விட்டுப் படிக்காதபோதும் யாரோ ஒருவர் நம்மிடம் பேசுவது போலவும் எதையோ நம்மிடம் கூறுவதுபோலவும் ஒரு குரல் ஒலிக்கிறதே அக்குரலுக்குக் தான் நடை’ என்கிறார் மேலை நாட்டு அறிஞர் ஒருவர்.

(N. Fyre Anatomy of Criticism p. 268.)

பாவேந்தரின் நடை, கடை கருத்துக்களின் உடை” என போப் கூறியது போன்று, கருத்துக்காக நடையினே எளி மையாக்கிப் பாடுகின்ற நடையாகும்.