பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 */ நெஞ்சின் நினைவுகள்

இருக்க வேண்டிய முறைமை திரிந்து வறண்டு போன கோத்தில் அங்கிலம் பாலை என்று கூறப்பட்டது. எனவே இந்த ஐந்து கிலங்களில் தமிழ் மக்கள் வாழ்வு சிறந்திருந்தது.

சங்க இலக்கியம் முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் என்று மூன்று பொருள்களை உள்ளடக்கியதாக இருந்தது. நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப் பட்டன. ஐவகை நிலங்களும் அவ்வவற்றிற்குரிய அறு வகைப் பெரும்பொழுதுகளும் சிறுபொழுதுகளும் முதற் பொருள்களாகும். ஒர் ஆண்டினை ஆரு கப் பகுத்து, சித்திரை வைகாசி மாதங்களே இளவேனிற் காலம் என்றும், ஆனி ஆடி மாதங்களை முதுவேனிற் காலம் என்றும், ஆவணி புரட்டாசி மாதங்களைக் கார்காலம் என்றும், ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் கூதிர் அதாவது குளிர் காலம் என்றும், மார்கழி தை மாதங்களை முன்பனிக்காலம் என்றும், மாசி பங்குனி மாதங்களைப் பின்பனிக்காலம் என்றும் வழங்கினர். வைகறை, முற்பகல், மதியம், மாலை, இரவு, யாமம் முதலிய ஆறு பொழுதுகளாக ஒரு நாள் பிரிக்கப்பட்டது. தெய்வம் முதல் இசை சருகப் பல பொருள்கள் கருப்பொருள்கள் எனப்பட்டன. ஒரு கிலத்திற்குரிய ஒழுக்கம் - ஒழுகலாறு ‘உரிப்பொருள்” எனப்பட்டது. குறிஞ்சிக்குக் கூடலும் கூடல் கிமித்தமும், முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருதத்திற்கு ஊடலும் ஊடல் கிமித்தமும், நெய்தலுக்கு இரங்கலும் இாங்கல் கிமித்தமும், பாலைக்குப் பிரிதலும் பிரிதல் கிமித்தமும் உரிப்பொருள்களாக - ஒழுகலாறுகளாகக் கொள்ளப்பட்டன. எனவே சங்க இலக்கியத்தில் தமிழ் காட்டு இயற்கை வளத்தின் இனிய பெற்றியினையும் பழங் தமிழரின் வாழ்க்கை நெறியினையும் ஒருங்கே காணலாம். கருங்கச் சொன்னுல் இயற்கையின் இனிய பின்னணியில்