பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கெஞ்சின் நினைவுகள்

தெளிவும் இனிமையும் சிறந்த நடையின் இயல்புகள். இப்போக்கினை,

திேதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் கனலேற்ற வந்த களியே, எனது மனமேறுகின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே’

எனும் பாவேந்தர் பாடலில் காணலாம்.

எளிமையாக ஒன்றினைக் கூறுதல் நடையின் இன்றி யமையாத இயல்புகளில் ஒன்று. இக்கூறு பாவேந்தரின் நடையில் மிகுதியாக உள்ளதைக் காணலாம். சாதாரண மக்களிடையே காணப்படும் சொற்களைக் கவிச்சொற்களாக மாற்றும் அரிய திறம் இவரிடம் உண்டு.

அணைகரை மேட்டின் அண்டை

அடர்மர நிழலில் கின்று

தணலேறும் தம்கால் ஆற்றிச்

சாலைகண் டுரைக் கண்டார்’ என்று பாடுகையில் அண்டை என்ற பேச்சு வழக்குச் சொல்லை இலக்கிய வழக்காக்குவதன் காரணம் சாதாரண மக்களுக்கும் தமது கவிதை புரிய வேண்டும் என்று கினைக் கும் கவிஞர் உள்ளம் புலப்படுகிறது.

இவர், பாடல்களில் அகவல் விருத்தம் கொச்சகக் கலிப்பா போன்ற யாப்பு வகைகளே கையாள்வதால் எக்கருத்தையும் எளிதாகச் சொல்ல முடிகிறது. இவருடைய பாடல்களில் ஒலிநயம், சங்கம் சிறப்பாக அமைவதை,

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்குநேர்!’