பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 159;

போன்ற பாடல்களில் காணலாம். ஒலிநயம் சிறப்புற, எதுகை மோனே இவற்றைப் பாடல்களில் அமைக்கும். போக்கை,

நாய்என்று பெண்ணை கவில்வார்க்கும் இப்புவிக்குத், தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே’ என்றும்,

தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்குநேர் என்றும் பாடுவதன்மூலம் காணலாம்.

கருத்து வளம்

‘வெறிகொண்ட மன எழுச்சியைச் சித்திரிப்பதிலும் வார்த்தைகளைக் கொட்டும் ஆவேசத்திலும் வாழ்க்கையைச் சேர்ந்த பல அம்சங்களையும், இலட்சியங்களையும் கவிதைப் பொருளாக அமைப்பதிலும் கருத்து வன்மையிலும் பாரதிதாசன் தலைசிறந்து விளங்குகிறார்’ என்கிறார் ஏ. வி. சுப்பிரமணிய ஐயர். இக்கூற்றினை நோக்குகையில் பாவேந்தர் கருத்துகளைக் கூறும் வகையில் அவரது புரட்சியின் போக்குப் புலகிைறது.

பொதுமைக் கருத்துகள்

இலக்கியத்தில் உணர்ச்சி எங்ஙனம் உயிர் போன்று விளங்குகிறதோ, அதுபோல இலக்கியத்தில் கருத்து அவ் வுயிரின் உடல் போன்று விளங்குகிறது. பாவேந்தர் பாடல்களில் உணர்ச்சிக்கும் கருத்துக்கும் சிறிதளவும் குறைபாடு இல்லாத வகையில் கருத்துக்கு ஏற்ப உணாச்சி யைக் கொட்டி இருக்கிரு.ர்.

  • எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பான்

இடம் நோக்கிச் செல்கின்ற திங்த வையம்’