பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ■ நெஞ்சின் நினைவுகள்

எனக் கூறுகையில் உலகின் நோக்கம் பொதுமையில்தான் இருக்கிறது என்பதை விளக்குகின்றார்,

பாண்டியன் பரிசில் பொருள் உடையோன் பொது நோக்குடையோன் ஆகியோர் என்ன எண்ணுகின்றனர் என்பதை மிக அழகாக,

பொருளாளி திருடர்களை விளைவிக்கின்றான்

பொதுவுடைமையோன் திருட்டைக் களைவிக்கின்றான் என்கின்றார்.

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிலர்

கொள்ளை யடிப்பதும் திேயோ? என்று சமுதாயக் கேள்விக் கணைகளால் சுட்டுகின்றார்.

ஏழைகள் அத்தனைபேரும் உண்டு மகிழும் நாளே கம் நாடு உயர்நிலை அடையும் கன்னள் ஆகும் என்பதனே,

ஏலுமட்டும் நான் புசித்தேன் - அவை ஏழையார் அத்தனை பேர்க்கும் ஞாலத்தில் எங்காள் கிடைக்கும்’

என்று தன் ஏக்கப் பெருமூச்சை வார்த்தைகளாக வடித் துக்காட்டுகின்றார்.

புதுமைக் கருத்துகள்

“என்னரும் தமிழ்நாட்டின்கண் எல்லோரும்

தமிழ் கற்று......

என்று கூறுவதன்மூலம் ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்க வேண்டும் என்கின்றார். இரு எருதுகள் சமமாக இழுத்துச் சென்றால் வண்டி எப்படிச் செல்லுமோ,

அபபடி வாழ்க்கையும் சமமாகச் செல்லும் என்பதை உணர்த்துகின்றார் .