பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 1618

“கடல்மேல் குமிழிகள்’ என்ற காவியத்தில் செம்மறித். திறல் என்பவன்

கலப்புமணம் ஒன்றே கல்வழிக்குக் கை காட்டி என்று சொல்லுவதாகப் பாடுகின்றார்.

குடும்பவிளக்கில் நூற்று ஐந்து வயதான மணவழகரும் அவர் மனையாள் தங்கமும் முதிர்ந்த நிலையில் எப்படி வாழ்கின்றனர் என்பதை,

சருகொன்று காற்றால் வந்து

வீழ்ந்ததுபோலத் தங்கப்

பெரியாளும் பெரியான் அண்டைத்

தலையணை மீது சாய்ந்தாள்

அருகரு கிருவர் : மிக்க

அன்புண்டு, செயலே இல்லை .

என்று முதியோர் காதலை நயமுடன் கூறுகின் ருர். குழந்தை மணத்தை எதிர்க்கும் உள்ளத்தையும் இவர் பாடலில் காணலாம்.

பெண்மை

பெண்மையில் பாவேந்தர் கண்ட புரட்சி கால வெள்ளத்தைக் கடந்து கவிதை வெள்ளத்தைப் பாய்ச்சிய பெரும் புரட்சியாகும்.

பெண்ணடிமை தீருமட்டும பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீராது

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே'