பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1162 நெஞ்சின் கினைவுகள்

என்றும், முதியோனுக்குப் பெண்ணேத் திருமணம் செயயும் அவல நிலையை,

இளமை ததும்ப எழிலும் ததும்பக் காதல் ததும்பக் கண்ணிர் ததும்பி என்மகள் கிழவனருகில் இருந்தாள் ”

என்று தாய் கூறுவதாகத் தாய்மை நிலையில் கின்று பேசு

கின்றார், i.

பெண்கள் துயர் காண்பதற்கும் கண்ணிழந்தீரோ: கண்ணிழந்தீரோ உங்கள் கருத்திழந்தீரோ: பெண்கொடி தன் துணையிழந்தாள் பின்புதுணை கொள்வதிலே மண்ணில் உமக் குறுவதென்ன வாழ்வறிந்தோரே: வாழ்வறிந்தோரே மங்கைமாரை ஈன்றாேரே:

என்ற பாடலில் விதவைகளின் அவல நிலையினையும் அதைத் துடைத்தெறியாத சமுதாயத்தினேயும் ஆண்களேயும் சாடு கின்ற போக்கினையும் அதனைக் கனிவோடு கூறுவதனையும் காணலாம்.

பெண்மை அழகுபெற, சமுதாயம் உயர்வுபெற இப்பொழுது பேசப்படும் குடும்ப நலத் திட்டத்தை,

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?

என்கின்றார்.

பெண்களின் பேச்சுரிமைக்கு வாதாடும் கவிஞரின் உள்ளத்தை,