பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 163

பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ? மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?”

என்ற பாடலில் காணலாம்.

தமிழ்

மொழியின் ஆன்மாவைத் தரிசிப்பவர்கள் கவிஞர்கள் தான். தமிழ் முன்னேற்ற ஆர்வமும், சமூக முன்னேற்ற ஆர்வமும் மிக அதிகமாக இருந்தது என்பதைக் கவிஞ ருடைய கவிதைகள் பறைசாற்றுகின்றன. தமிழைப் பற்றிப் பாடும் பொழுதெல்லாம் தன்னை மறந்து உற்சாக வெறியுடன் பாடுகின்றார்.

தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்லதொண்டு என்று பாடுவதன்மூலம் தமிழுக்குத் தொண்டு செய்ய விரும்பும் தமிழுள்ளம் தமிழுலகுக்குக் கிடைத்த தவப்பேறு உள்ளமாகப் புலப்படுகிறது

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்; இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உனமுற்ற தீ

எனத் தமிழின் பெருமையைப் பாடுவதில் உற்சாகம் கொள்கிறார் கவிஞர். அவரது தமிழின் ஆர்வத்திற்கு இதுவே போதிய எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. தமிழைப் பற்றிக் கூறவே இவர் தனித்தனிப் பாடல்கள் கிறையப் பாடியுள்ளார். மற்றும் கவிதை நாடகம்,கவிதைக் கதை போன்றவைகளின் இடையேயும் தமிழை மறக்காமல் பேசும் உள்ளத்தைக் காணலாம். “பாரதிதாசன் தமிழ்ப் பற்றுக்கு எல்லையுல்லை. அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அங்கியனும் தமிழனகி விடுவான்’ என்பார் அ. சிதம்பர நாதன் செட்டியார். இக்கூற்றின் உண்மை அவரது பாடல் களைப் படிப்பவருக்குத் தான் புலகுைம்.