பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 = நெஞ்சின் நினைவுகள்

உழைப்பாளி

தமிழைப் போலவே இவர் கினேவில் நீங்கா இடம் பெற்று இருப்பது தொழிலாளர் கலகுைம்.

நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிது கூழ்த் தேடுங்கால் பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு கானும் இன்பம் கவின்கிலவே ! உனக்காணும் இன்பம்தானே!

என்ற பாடலில் தான் அனுபவிக்கும் இன்பத்தைத் தொழி’ லாளர் காணும் இன்பமாக ஒப்பிட்டுக் காணும் கவிதை நெஞ்சின் நெகிழ்ச்சி நிலவுக்குக் கூட அதிக ஒளியைத் தருவது போலிருக்கிறது!

தொழிலாளரை முன்நிறுத்திக் கவிஞர் பேசத் தொடங்கி விட்டால் தீப்பொறி பறக்கும்; இதயம் கனல் பற்றித் துடிக்கும். அழகன் (கடல்மேற் குமிழிகள்) பேசுவதாக, -

ஊரினிலே தெருவினிலே வீட்டி லெங்கும்

உம் உழைப்பைப் பொன்னெழுத்தால் காண்பதன்றி - ஆரிங்கே உழைத்தார்கள்

என்றும், அவிழ்ந்த தலே முடிவதற்கும் கூடக் கைகளுக்கு ஒய்வு கிடைக்காமல் ஓயாது உழைத்து,

தவழ்ந்தெழுந்து நடந்துவளர் குழந்தைபோலும் தரை, வீடு. தெரு, சிற்றுார், நகரம் ஆக

இங்காட்டை எவன் படைத்தான்? என்றும் கேள்விக் கணகளால் முதலாளி வர்க்கத்தைக் கொண்ட, குள்ளச் சமூகத்தைப் பார்த்துக் கேட்கின்றார்.