பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியொளி வீசிய தமிழ் ஒளி

‘கவிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை; ஆல்ை பிறக் கிரு.ர்கள்’ என்பது கவிஞர் குறித்து வழங்கும் பொன் னுரையாகும். நம் கவிஞர் தமிழ் ஒளி அவர்கள் பிறவிக் கவிஞர் ஆவர். கரந்தைப் புலவர் கல்லூரியில் மூன்றாண்டு காலம் முறையாகத் தமிழ் பயின்ற கவிஞர் 1945 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் சென்னை வந்தவர் சென்னே யிலேயே தங்கி விட்டார். சென்னையின் அன்றாட அரசி யலில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டு விட்டது. ‘தமிழ் ஒளி’ என்னும் புனைபெயரில் தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கி விட்டார்.

தென்னுற்காடு மாவட்டம் குறிஞ்சிப் பாடியை அடுத்த ஆடுரில் 21 - 9 - 1934 அன்று கவிஞர் பிறந்தார். இவர் பெற்றாேர் சின்னயா - செங்கேணி அம்மாள் இவருக்கு இட்ட பெயர் விஜயரங்கம் என்பதாகும். கவிஞரின் குடும்பம் புதுச்சேரிக்குக் குடி பெயர்ந்தது. இதல்ை கல்வே கல்லூரியில் பயிலும் வாய்ப்பினைக் கவிஞர் பெற்றார். அக்கல்லூரியில் அதுபோது தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டுவந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களோடு ஆசிரியர் - மாணவர் உறவு முறையில் நெருங்கிய தொடர்பு கொண்டார். இவ்வுறவு இவர்தம் கவிதையுள்ளத்திற்கு உரமாக அமைந்தது. சின்னஞ்சிறு வயதிலேயே தம்