பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FI,,

காலந்தோறும் கன்னித்தமிழ் 15,

மக்கள் வாழ்வு புலப்படுத்தப்படுகிறது எனலாம். (The life of the People was portrayed in the background of Nature).

சங்க இலக்கியங்கள் அகம்’, என்றும், புறம்’ என்றும் பகுத்துக் கூறப்பட்டன. ஒத்த அன்பும் பண்பும் வயதும் இளமையுமுடைய ஆண், பெண் இருவரின் காதல் வாழ்வை எடுத்துரைப்பன அகவிலக்கியங்கள் என்றும், அரசர்கள் மேற்கொண்ட போர், அதிற்காட்டிய வீரம், வீரம் காட்டியோர்க்கும் புலமை காட்டிச் செய்யுள் செய்தோர்க்கும், இல்லையென்று வந்த இரவலர்க்கும் இல்லே யென்னது அளித்த கொடை முதலிய பொருள்களே உள்ளடக்கிய பாடல்கள் புறவிலக்கியங்கள்’ என்றும் கூறப்பட்டன. காதல் பற்றிப் புலவர்கள் பாடிய பாட்டுகள் எல்லாம் குற்றமற்ற குறிக்கோள் இலக்கியமாக இருக்க வேண்டும் என்று பழந்தமிழர் கருதினர். ஆதலின் சங்க காலப் புலவர்கள் தலைவன், தலைவி - அதாவது காதலன் காதலி முதலாைேரைப் பெயர் குறிக்காமல் தம் கற்பனைகளை மனித சமுதாயத்திற்குப் பொதுவாக்கிப் பாடினர். மேலும் ஒவ்வொரு வகைக் காதலொழுக்கமும், ஒவ்வொரு வகைப் போர்ச்செயலும் ஒவ்வொரு வகை கிலத்திற்குச் சிறந்து விளங்குதலை உணர்ந்து, வாழ்க்கைப பகுதிகளுக்கும் நிலப்பகுதிகளுக்கும் தொடர்புபடுத்தி இலக்கிய மரபு ஒன்றைக் கண்டனர். அகத்திணை பற்றிய ஐவகைப் பிரிவுகளை முன்னரே கண்டோம். போர், கொடை முதலிய இன்னேரன்ன செய்திகளைப் பாடும் புயத்திணை இலக்கியம் வெட்சி, வஞ்சி, நொச்சி, உழிஞை தம்பை, வாகை, பாடாண் எனப் பகுக்கப்பட்டது, போருக்குத் தொடக்கமாக ஆகிரைகளைக் கவர்தல் வெட்சி’ என்றும், அவ்வாறு கவர்ந்து செல்லப்பட்ட ஆகிரைகளை மீட்டு வருதல் கரங்தை என்றும், பகைவன் காட்டு மண்ணே