பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியொளி வீசிய தமிழ் ஒளி 169

என்ற தலைப்பில் அவர் புனைந்திருக்கும் கவிதை அவர்தம் வருணனைத் திறத்தினையும் ஒலிநயம் சமைக்கும் ஆற்றலின யும் ஒருங்கே காட்ட வல்லதாகும்.

வானக் கருமுகில் மீது செழுங்கதிர்

வந்து படுகின்ற வேளை வெடித்தது தென்னம் பாளை! ஞானக் குமரி நகைத்தனள் பார், அதோ நாற்புறமும் தென்னஞ் சோலை ! நன்கு விடிந்திடுங் காலை ! இதுபோன்றே காவிரியாற்றைக் கவிஞர் தென்மகள் வருகின்றாள்’ என்ற கவிதையில் சிறக்கப் பாடுகின்றார்,

பூவிரி சோலைகள் யாவும் வணங்கப்

பொன்மலர் தான் சிந்தக் காவிரி அன்னை வருகின்றாள் பொற்

கழல் கலகல வென்றே ! பூந்துகில் சுற்றிப் பொற்கரை யிட்டுப்

புன்னகை தான் சிந்தித் தீந்தமிழ் பாடித் திரையொடும் ஆடித்

தென்மகள் வருகின்றாள் ! இயற்கை வருணனையோடு இனிய கருத்துகளையும் புகுத்தி எழுதுவதில் வல்லவர் கவிஞர் என்பதன அவர்தம் “கிலா பற்றிய கவிதையால் அறிகிருேம்.

பூட்டிய வீட்டைத் திறந்த குடும்பப் புகழ்விளக் கேற்றிடவே - சுடர் தீட்டப் புகுந்த புதுமணப் பெண் எனத் தென்படும் வட்ட நிலா - கண் முன்படும் வட்ட நிலா ! *தாமரைப் பெண்’ என்ற கவிதையில் கற்பனை நயமும் ஓசை நயமும் ஒன்றையொன்று போட்டியிட்டுச் செல்லக் காணலாம்.