பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நெஞ்சின் நினைவுகள்

தாமரை

மூடிய போர்வை அகற்றியென் மேனியில்

முத்தங் கொடுத்தவன் யார்! - மனப் பித்தங் கொடுத்தவன் யார்? - இமை மூடிய கண்கள் விழிக்க எனக்கொரு

மோகங் கொடுத்தவன் யார்? - புதுத் தாகங் கொடுத்தவன் யார்? கதிரவன்

மொட்டென் றிருந்தவுன் மேனியிற் காலையில்

முத்தங் கொடுத்தவன் நான் - மனப் பித்தங் கொடுத்தவன் நான் ! - ஒரு பொட்டென் றிருந்தவுன் மேனி மணம்பெறப்

பூத்திடச் செய்தவன் நான் - கலைக் கூத்திடச் செய்தவன் நான் !

இவர் படைப்பான கவிதைகள் பல அழியா அழகுடையன என்றாலும் அழியவே அழியாத கவிதை (Immortal poem) எனக் குறிப்பிடத்தக்க சிறப்புகள் பலவும் பொதிந்திலங்குவது பட்ட மரம் என்னும் கவிதையாகும். உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து எனும் கவிதைக்கு வேண்டிய நாற்கூறுகளும் கலம்பெற நிறைந்தொளிர்வது இக்கவிதையாகும். கவிதையினே ஒரு முறை வாய்விட்டுப் படித்தாலேயே இவ்வுண்மை விளங்கக் காணலாம்.

பட்ட மரம்

மொட்டைக் கிளையொடு

கின்று தினம்பெரு மூச்சு விடும்மரமே ! வெட்டப் படும்.ஒரு

நாள்வரு மென்று விசனம் அடைந்தனையோ !