பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நெஞ்சின் நினைவுகள்

“தத்துவ ஞானம் கைவரப் பெருக எவனும் சிறந்த கவிஞகை மாட்டான்’ என்று திறய்ைவாளர் கூறுவர். ‘வேண்டும் வரம்’ எனுங்கவிதையில் கவிஞர் மனித வாழ்வு மாண்பு,ற வேண்டுமெனில் மேற் கொள்ளத்தக்க வழிகஅளப் பின்வருமாறு சொல்கின்றார்.

வேண்டும் வரம்

மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து வசத்தில் மடக்கிவிட்டால் தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத் திடங்கொண்டு வாழ்ந்திடலாம் !

ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி அதட்டி நிறுத் திவிட்டால் , இந்த உலகம் நமைச்சுற்றி வந்திடும் இட்ட பணிபுரியும ! ஒட்டை உடலம் உருப்பட கித்தம் ஒருசிங்தை கொண்டிருந்தால் , கோட்டை யிதற்குக் கொடி கட்டிச் சேனைகள் கும்பிட வாழ்ந் திடலாம் ! கேவல ஆசையின் வாய்கள் நொறுங்கக் கிழித்தெறிந் தால் உலகில் சாவு பயப்படும , மானுடம் வென்று ஜயம் ஜயம் என்றாடும் ! கவிஞர் நலிந்தவர் வாழ்வைக் கண்டு கைபவர் என்பது அவரோடு பழகியவர்களும், அவர் எழுத்தை முன்னணி’ பத்திரிகையிற் படித்தவரும் அறிவர். வானத்து மீன்களைப் பார்க்கும் கவிஞர்க்கு, அவை உடலுழைப்போர் உடம்பில் ஏற்பட்ட தழும்புகளாகத் தெரிகின்றன. சொற்களிற் சோக உணர்ச்சிச் சிதறல்கள் தெரிகின்றன. --