பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நெஞ்சின் நினைவுகள்

மழைபிடித்துப் பெய்கிறது ஐப்பசியில் ஏழை மனங்குமுறும் விதம்போலும் இடிக்கிறது வானில்! தழைபிடித்த மரமெல்லாம் குளிர்பிடித்துக் கொள்ள தலைகீட்ட முடியாமல் பறவையெலாம் அங்கு விழிமூடித் துணைகளுடன் சிறகணைத்துக் கொண்டு வேடன்போல் தாக்குகிற ஊதலிடைத் துஞ்சும்! கிழித்தெழுந்து முகில் தன்னைப் புரட்சியுள வேகம் கீழ்த் திசையும் மேற்றிசையும் காட்டிவிடும் மின்னல்.

“பாடு பாப்பா’ப் பாடல் தொகுதி மூலம் கவிஞர் தமிழ் ஒளி அவர்கள் விழுமிய குழந்தைக் கவிஞராகவும் திகழ்கிரு.ர். மஞ்சரி’ பத்திரிகையின் ஆசிரியராக விளங்கிய அறிஞர் தி. ஜ. ர. அவர்கள், பாடு பாப்பா நூல் முன்னு ரையில் தமிழ் ஒளியின் கவிதை வளத்தினைப் பின்வரு மாறு காட்டுகின்றார்:

“தமிழ் ஒளியின் வாக்கிலே, தெள்ளத் தெளிந்த கருத்துக்களும் கற்பனை வளமும் இருக்கும்; ஆல்ை, அத்தனையும் மிக எளிய சொற்கள். அந்தச் சொற்களை யெல்லாம் மலரைத் தொடுப் பது போல் இணைத்து அதிலேயே ஒர் அழகையும் வருவித்து விடுவது ஒரு லாவகம், தனித்திறன்.’ ‘தென்னங்தோப்பு கவிஞரின் பார்வையில் பின்வரு மாறு காட்சி தருகின்றது:

அன்னை போல அன்பாய் நிற்கும் ஆசை யாய்க்கை வீசி நிற்கும் தென்னங் தோப்புப் பாராய்! தெரிகின்றது நேராய்! மின்னும் ஓலைக் கைகள் நீட்டும் மேலும் பாளைப் பற்கள் காட்டும் தென்னங் தோப்புப் பாராய்! தெரிகின்றது நேராய்! ஒலைக் கொத்தும் நீரும் காயும்