பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியொளி வீசிய தமிழ் ஒளி I?5

உள்ள துள்ள யார்க்கும் ஈயும் நீளத் தென்னை பாராய்! நிற்கின்றது நேராய்! கல்வி கற்க வேண்டுவதன் இன்றியமையாமையினைச் சிறுவர்க்கு விளக்கும் கவிஞர் திறம் முன்னும் பின்னும்’ என்னும் பாடலால் விளக்கமுறுகின்றது: பாடம் படியா ஒரு பையன் பள்ளி செல்லா ஒரு பையன்

மூட்டை சுமந்தான் பின்னலே! சொல்லைக் கேளா ஒரு பையன் துள்ளித் திரிந்த ஒரு பையன் கல்லான் ஆளுன் முன்னலே! கட்டை சுமந்தான் பின்னலே! சோம்பித் திரிந்த ஒரு பையன் சுற்றித் திரிந்த ஒரு பையன் தேம்பித் திரிந்தான் முன்னலே தெருவில் நின் ருன் பின்னலே! ‘கண்ணம்மா’ எனுங்கவிதை, காதல் எனும் பேருணர்ச்சி இக்கவினுலகில் நிலைக்கும் வரை கின்று வாழும் நேர்த்தியான பாடலாகும். சிறந்த சொற்கள் சிறந்த முறையில் சிறந்த இடங்களில் பெய்யப்பட் டிருக்கும் பாங்கினை இக்கவிதையில் காணலாம். சான்றிற்கு இதோ சில கவிதை நறுக்குமணிகள்:

மஞ்சள் கரைத்து விட்டாள் - கண்ணம்மா

மாணிக்க ஓடையிலே : நெஞ்சங் கரைந்து விட்டேன் - மஞ்சளாய்

நீந்திநீ ராடுகிறேன்.

உள்ளம் எழுதி விட்டாள் - கண்ணம்மா

ஊற்று நீ ரோடையிலே!

கள்ளம் அழிந்துவிட்டேன் - அடியேன்

காதல் நீ ராடுகிறேன்!