பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நெஞ்சின் கினைவுகள்

வெல்ல வேண்டும் என்று கருதிப் படை கடத்திச் செல்வது ‘வஞ்சி என்றும், அவ்வாறு படையெடுத்துச் சென்று தலைநகரைச் சுற்றியுள்ள கோட்டையை வளைத்து முற்றுகையிடுவது *உழிஞை” என்றும், பகைவர் கைக்கொள்ளாதவாறு அவர் முற்றுகை முயற்சிகளேத் தடுத்து நிறுத்துவது கொச்சி என்றும், இரு தரப்புப் படையினரும் களம் கண்டு போர் செய்தல் தும்பை” என்றும், அப்போரில் வெற்றி பெற்றாேர் அணிவது ‘வாகை எனறும், வெற்றி பெற்ற மன்னனின் கொடை. வீரப்பண்பு முதலியவைகளைப் பற்றிப் பாடுவது பாடாண்’ என்றும் கூறப்பட்டன. இவ்வாருன தமக்கு முற்பட்ட இலக்கிய மரபினையே தொல்காப்பியர்ை,'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ என்று சுட்டுகின்றார்.

பழமதுரையில் முதற்சங்கமும், கபாடபுரத்தில் இடைச் சங்கமும், இப்போதைய மதுரையில் கடைச்சங்கமும் கில வியிருக்க வேண்டும் என்ற செய்தி இறையனர் களவியல் உரையால் தெரியக் கிடக்கின்றது. தமிழகத்தின் தெற்குப் பரப்பாக அமைந்த குமரிக் கோடும் பஃறுளியாறும் காலப்போக்கில் கடலால் கொள்ளப் பட்டிருக்கும் என்பதனைப் புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம் கொண்டு அறியலாம். m

தொல்காப்பியம் பழம்பெருநூல். அஃது எழுத்து, சொல், பொருள்களைத் தெளிவுறுத்துகின்றது. எழுத் திற்கும் சொல்லிற்கும் மட்டுமல்லாமல், இலக்கியத்தில் அமையத்தக்க பொருளுக்கும் இலக்கணம் கூறும் முழு நூலாகத் தொல்காப்பியம் துலங்குகின்றது.

பாட்டும் தொகையும் என வழங்கப்படுவது பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் குறிக்கும். பல்வேறு