பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலந்தோறும் கன்னித்தமிழ் 17 °

புலவர்கள் பல்வேறு சமயங்களில் பல்வேறு மனப்பாங்கு களே அமைத்துப் பாடிய பாடல்களின் தொகுப்பாக இத் தொகை நூல்களைக் கொள்ளலாம். இச்செய்யுட்களின் காலத்தினைக் கி. மு. 500 முதல் கி.பி. 300 வரை எனக் கொள்ளலாம். பல பாடல்கள் இருந்து மறைந்திருக்கலாம். எஞ்சிய பாடல்களைப் பொருள் நோக்கியும், செய்யுள் வகை நோக்கியும் அரசர்களின் ஆதரவு கொண்டு புலவர்கள் சிலர்: தொகுத்துத் தந்து நமக்கு அளித்த கொடையே தொகை நூல்களாகும். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை, கெடு கல்வாடை, முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற் றுப்படை, கல்லூர் நத்தத்கர்ை பாடிய சிறுபானற்றுப் படை, கடியலூர் உருத்திரங்கண்ணனர் பாடிய பெரும்பா னற்றுப்படை, பட்டினப்பாலை,கப்பூதனர் பாடிய முல்லைப் பாட்டு, மாங்குடி மருதனர் பாடிய மதுரைக் காஞ்சி, கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு, பெருங்குன்றுார் பெருங் கெளசி கனர் பாடிய மலைபடுகடாம் முதலியன பத்துப்பாட்டாகும்.

அகப்பொருள் பற்றிய பாட்டுகளுள் 3 அடி முதல் 6 அடி வரை அமைந்த பாட்டுகளே ஐங்குறுநூறு என்றும், 4 அடி முதல் 8 அடி வரை அமைந்த பாட்டுகளைக் குறுங் தொகை என்றும்,9 அடி முதல் 13 அடி வரை அமைந்த பாட்டுகளை கற்றிணை என்றும், 13 அடி முதல் 31 அடி வரை அமைந்த பாட்டுகளே அகம் என்றும் அழைத்தனர். சேர நாட்டு மன்னர் பதின்மரைப் பற்றியெழுந்த 100 பாட்டுகளைப் பதிற்றுப்பத்து என்றும், பரிபாடலால் அமைந்த பாட்டுகளின் தொகுதியைப் பரிபாடல் என்றும், கலிப்பாவால் அமைந்த அகப்பொருட் பாடல் தொகுதியைக் கலித்தொகை என்றும், புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைப் புறநானூறு என்றும் பெயரிட்டு வழங்கினர். ஆக, பத்துப்பாட்டும் எட்டுக் தொகையும் என்று இன்று வழங்கும் நூல்களுள்