பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கெஞ்சின் கிஃனவுகள்

சராயிரத்து முந்நூற்றெண்பது செய்யுட்கள் உள்ளன. இத்தகைய சிறந்த செய்யுட்கள் எழுந்த சங்ககாலத்தினத் தமிழிலக்கியத்தின் பொற்காலம் என்றும் அறிஞர் குறிப்பர்.

சங்க காலத்தை அடுத்த காலப் பகுதியினைச் சங்க மருவிய காலம் என்பர். பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகைநூல், இக்காலப் பகுதியில் தோன்றியது எனலாம். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னு காற்பது, இனியவை காற்பது, கார் காற்பது, களவழி காற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னிலை என்னும் பதினெட்டு நூல்கள் அத்தொகுப்பில் அடங்கும். சங்க இலக்கியத்தினின்றும் இவை பொருளிலும் நடையிலும் வேறுபட்டுவ ளன. இப்பதினெட்டு நூல்களுள் நீதிநூல்கள் பதினென்று; அகப்பொருள் நூல்கள் ஏழாகும். இப்பதினெட்டு நூல்களுள்ளும் தலைசிறந்து கி ற்பது திருக்குறளாகும். உரையாசிரியர் பலர் உரையெழு திய சிறப்பும், மொழிகள் பலவற்றுள் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்பும் இந்நூலுக் குண்டு. ‘எல்லா நூல்களிலும் கல்லன. எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக்கூறுதல் இவர்க்கு இயல்பு’ என்று உரையாசிரியர் பரிமேலழகர் திருவள்ளுவரைச் சுட்டுகின்றார். இக்கூற்றுப் பொருத்தமுடைத்தேயாகும். வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளைத் தெளிந்து கூறும் நூலாக இது திகழ்வதால் இந்நூல் காலம் கடந்தும் இடம் கடந்தும், காடு கடந்தும் வாழவல்ல சிறப்புடையதாக விளங்குகின்றது. அடுத்த சிறப்புடைய நூல் நாலடி யாராகும். சமண முனிவர்கள் பாடிய இத்தொகுப்பு நூல் அறம் முதலியன பற்றிக் கூறுவதாகும். ஒவ்வொரு