பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நெஞ்சின் நினைவுகள்

என்னும் காற்பொருள் பற்றிய இன்னிலை என்னும் நூலின் ஆசிரியர் பொய்கையார் என்பர். கைங்கிலே’ என்ற வேறொரு நூலினைக் கீழ்க்கணக்கில் பதினெட்டாவது நூலாகக் குறிப்பிடுவாரும் உளர்.

இதே காலத்தில் தமிழில் இருபெருங் காப்பியங்கள் தோன்றின. ஒன்று சிலப்பதிகாரம்; மற்றாென்று மணிமேகலை. இவற்றை ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று கூறும் வழக்கும் உண்டு. குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகள் பாடிய திங் தமிழ்க் காப்பியம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமாகும். சோனட்டு வணிகக் குடியிற் பிறந்த கோவலனையும் கண்ணகியையும் காப்பியத் தலைவர்களாகக் கொண்டு, அவர்கள் வாழ்வில் நேர்ந்த நிகழ்ச்சிகளையும், மாற்றங்களையும், திருப்பங்களையும் கதைப்போக்கில் அமைத்துக் காட்டும் பாங்கில் அமைக் துள்ளது சிலப்பதிகாரமாகும். சிலப்பதிகாரம் அக்கால அரசியல், சமய, சமுதாய, கலை வாழ்வுகளைப் பொதுமை தோன்ற விளக்கி கிற்கிறது எனலாம். சமயப் பொதுமை போற்றும் நூலாகச் சிலப்பதிகாரம் விளங்கச் சமயச் சார்புடைய நூலாக மதுரைக் கூலவாணிகன் சித்தலைச் சாத்தனரின் மணிமேகலை விளங்குகின்றது. பெளத்த சமயத்தின் சிறப்பு முழுக்க முழுக்க இந்நூலில் பேசப் பட்டிருக்கக் காணலாம். ஆயினும் பரத்தமையொழிப்பு, கள்ளொழிப்பு, பசியொழிப்பு, சிறையொழிப்பு முதலியன நடாத்தும் காவியத் தலைவியாக மணிமேகலை படைக்கப் பட்டுள்ளாள். தமிழிலக்கிய வரலாற்றில் தனிகிலைப் பாடல்கள் மாறித் தொடர்கிலேப் பாடல்கள் புகுந்த காலம் இஃதெனலாம். இவ்விரு காப்பியங்களையும் கி. பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியங்களாக அறிஞர் கொள்வர்.