பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலங்தோறும் கன்னித்தமிழ் 21

சங்க மருவிய காலத்தையடுத்து நாம் தமிழிலக்கிய வரலாற்றிற் கானும் காலம் சமய காலம் ஆகும். சமண பெளத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தை யடுத்து இங்காட்டின் பழம்பெரும் சமயங்களான சைவம், வைணவம், ஆகிய சமயங்கள் புத்துணர்ச்சி பெற்றன. தேவார மூவராம் திருஞானசம்பந்தரும், திருநாவுக் கரசரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தலங்கள் தோறும் சென்று, அவ்விடை எழுந்தருளியுள்ள இறைவனின் திருத்தாளினே வணங்கி மக்கள் நலம்பெறத் தேவாரப் பதிகங்களைப் பாடினர். இப்பாடல்கள் மக்கள் மனத் திலும் வாழ்விலும் ஒரு புத்துணர்ச்சியினையும் மறு மலர்ச்சினையும் ஏற்படுத்தின. திருக்கோயில்கள் தமிழர் தம் சமயக் கூடங்களாகவும், கலைக் கூடங்களாகவும் திகழ்ந்தன. இசை பெருகிற்று; கூத்து வளர்ந்தது; வீடும் நாடும் விளக்கமுற்றன. மக்கள் வாழ்வில் மகிழ்ச் சியும் அமைதியும் கிறைந்தன. ஆழ்வார் பன்னிருவரும் அழகனும் திருமாலிடத்து ஆராக்காதல் கொண்டு அகக் தோய்ந்து தோய்ந்து பக்திப் பாசுரங்கள் பாடி கின்றனர். “கலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணு வென்னும் காமம்’ என்று பாடினர்; பிற சமயத் தாக்குர வால் உறங்கிக் கிடந்த மக்களைத் தட்டியெழுப்பினர். அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டினர்; மறு மலர்ச்சி ஏற்பட வழிகோலினர். மாணிக்கவாசகரோ வெனில் பழைய காட்டுப்புறப் பாடல்களின் போக்கிற் பாடல்கள் அமைத்து மக்கள் மனங்கொள்ளுமாறு பாடி மக்களைச் சிவனன்பில் திளைக்கச் செய்தார். திருத்தெள் ளேணம், திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி முதலான பாடல்கள் மக்கள் மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற் படுத்தின. குடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் கோதை யாரின் திருப்பாவையும், மணிவாசகரின் திருவெம்பாவை

2