பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நெஞ்சின் நினைவுகள்

யும் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட பெரு |கிலேயினை இன்றும் மார்கழித் திங்களில் நாம் காண்கி ருேம். காரைக்காலம்மையாரின் மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை முதலான நூல்களும், திருமூல ரின் திருமந்திரமும் ஆழ்வார் நாயன்மார் காலத்திற்கு முந்தியே முகிழ்த்த நன்னூல்களாகும்.

இக்காலத்தே சமணரும் பெளத்தரும் இலக்கண நூல்கள், கிகண்டு நூல்கள் இயற்றித் தமிழிற்குத் தலையாய தொண்டு செய்தனர். இதே நேரத்தில் வட சொற்களும் தமிழ்ச்சொற்களும் கலந்த மணிப்பிரவாள கடையும் அவர்களால் உருவாக்கப்பட்டது. பல்லவர் காலத்தெழுந்த கல்வெட்டுகளின் கடை இப்போக்கின தாயுளது. வடமொழியில் வல்லமை சான்ற சமண சம யத்தைச் சார்ந்த புலவர்கள் இயற்றிய பூரீபுராணம், சிந்தாமணி என்னும் நூல்களில் மணிப்பிரவாள கடை பினைக் காணலாம்.

வடமொழியில் அமைந்த ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கைத் தழுவியே தமிழிலும் ஐம்பெருங்காப்பியங்களும், ஐஞ்சிறு காப்பியங் களும் தோன்றின. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐந்தும் ஐம்பெரும் காப்பியங்களாகும். இவற்றுள் வளையாபதியும் குண்டலகேசியும் நமக்கு இன்று கிடைக்கவில் ஆல. ஆல்ை கதையும் சில செய்யுட்களும் மட்டும் கமக்குத் தெரிய வருகின்றன. சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்க தேவர் சமண சமயத்தினர்; பத்தாம் நூற்றாண்டினர். வட மொழியில் உள்ள கடித்திர சூடாமணியைத் தழுவிச் சிங்தா மணியை இயற்றினர். விருத்தப் பாவினைக் காப்பியத்தில் சிறப்படையச் செய்த பெருமை இவருக்குண்டு.