பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலந்தோறும் கன்னித்தமிழ் 23

நீலகேசி, சூளாமணி, உதயணன் கதை, யசோதர காவியம், காககுமார காவியம் ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என வழங்கும். அறுபது நூற்பாக்களில் களவியல் கூறும் இறையனர் அகப்பொருள் என்னும் நூலும் இக்காலத்ததேயாகும். நக்கீரர் என்னும் பெயரைக் கொண்ட பிற்காலப் புலவரொருவர் இந்நூலிற்கு அழ கான, விரிவான உரையொன்று எழுதினர். சிலப்பதி காரத்தில் பாட்டுகளின் இடையிடையே உரைப்பாட்டு மடை’ என்று உரை விரவி வந்தாலும், தொடர்ச்சியாகப் பழந்தமிழ் உரைநடையினை இவ்வுரையில்தான் முதற் கண் நாம் காண்கிருேம். சமய காலத்துக் கல்லாடர் பாடிய கல்லாடம் மதுரைச் சிவனரின் அறுபது திருவிளை யாடல்களை அழகுற விளக்குவதாகும். கல்லாட தேவ நாயனர் என்னும் பிறிதொரு புலவர் “திருக்கண்ணப்ப தேவர் மறம்’ என்னும் நூலினைப் பாடியுள்ளார். சேரர் மரபில் வந்த சேரமான்பெருமாள் என்பவர் முதல் உலா நூலாகக் கொள்ளப்படும் “திருக்கைலாய ஞானவுலா” வினையும், பொன்வண்ணத் தந்தாதியையும், திருவாரூர் மும் மணிக் கோவையையும் இயற்றினர். சேரர் மரபில் வந்த ஐயரிைதர்ை, ‘புறப்பொருள் வெண்பாமாலை’ என்னும் புறப்பொருள் இலக்கண நூலை இயற்றினர். நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள்’, குணசாகரர், அமிதசாகரர் என்னும் சமணத் துறவியர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, குணவீர பண்டிதர் இயற்றிய நேமிநாதம், வச்சணந்திமாலை முதலியன இக்காலத்தெழுந்த நூல்களாகும்.

இதனை யொட்டியே பிற்காலத்தே புத்தமித்திரனரின் வீரசோழியமும், தண்டியாசிரியரின் தண்டியலங்காரமும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையும், பவணந்தியாரின் கன்னுரல் இலக்கணமும் தோன்றின.