பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கெஞ்சின் வினைவுகள்

வால்மீகி வடமொழியில் இயற்றிய இராமாயணத் தைத் தமிழில் ஏற்றமும் எழிலும் பெற இயற்றித் தந்த வர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஆவர். உணர்வோவியம் வடிக்கும் சொல்வளமும் விழுமிய கற்பனையும், செவி விருந்து நல்கும் ஒலிநயமும், அரிய கருத்துச்செறிவும் கம்பர் கவியின் தனிச்சிறப்புகளாகும். பாத்திரப் படைப்பில் கம்பர் ஒப்பாரு மிக்காருமில்லாக் கவிஞராக உயர்ந்தோங்கி கிற்கிறார், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்னும் முந்தையோர் பாராட்டுரை முற்றிலும் பொருத் தமேயாகும்.

முதற்குலோத்துங்கன் காலத்தவரான சயங்கொண் டார் அம்மன்னனின் கலிங்க வெற்றியை உணர்ச் சிப் பெருக்கும், ஒசைச் சிறப்பும், போர்க்கள வருணனை களும் நிறைந்த பாடல்களில் வடித்துள்ள நூலே “கலிங் கத்துப்பரணி"யாகும். பரணி நூல்களில் தலையாய சிறப்புப் பொருந்திய நூல் இதுவேயாகும்.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்ச ராய் விளங்கிய சேக்கிழார், நாயன்மார் அறுபத்து மூவரின் வரலாறுகளைத் தமிழகம் முழுதும் பயணம் செய்து கேட்டறிந்து கல்வெட்டுச் செய்திகளுக்கும் மாறுபடாமல் |கின்று பாடியுள்ள பாடல்கள் “திருத்தொண்டர் புராணம்’ என வழங்கும். இடைக்காலத் தமிழ் காட்டினைத் து.ாய்மை துலங்கும் நெஞ்சுடன் இக்காப்பியத்தில் சேக் கிழார் காட்டியுள்ளார் எனலாம்.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழப் பெருவேந்தரின் அவைக்களப் புலவ ராய்த் திகழ்ந்தவர். இவர் கோவை, உலா, அந்தாதி பாடு -வதில் வல்லவர். சொல்லாட்சியும், எதுகை மோனை இயை