பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலந்தோறும் கன்னித் தமிழ் 25

யும் கற்பனையும், ஓசை நயமும் இவர் பாடலின் சிறப்புக ளாகும். இவர் மூவருலா, தக்கயாகப் பரணி, குலோத் துங்கன் கோவை முதலிய நூல்களைப் பாடியுள்ளார்.

வெண்பா பாடுவதில் வல்லவர் புகழேந்திப் புலவர் ஆவர். வடமொழியில் உள்ள நளன் கதையைத் தமிழில் ‘நளவெண்பா'வாக இவர் பாடினர். இவர் தம் நளவெண்பா சுவைமிக்க வெண்பாக்கள் கொண்டதாகும். பாட்டோட் டம் படிப்பவரைப் பரவசப்படுத்தும் பாங்குடையது

இக் காலத்தையடுத்த காலப்பகுதியினை உரை யாசிரியர் காலம்” எனலாம். சைவ, ←ᏡᎠ ☾aᏞöyüᎢ←ᏂᎫ சமயக் கருத்துகளுக்கு உரை விளக்கங் கண்ட சான் ருேர் பலர் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலும், இங் நூற்றாண்டையடுத்த சில ஆண்டுகளிலும் வாழ்க் தனர். சைவ சித்தாந்த நன்னெறியினைத் தம் சிவஞான போதத்தின் வாயிலாக உலகிற்கு உணர்த்திய பெருமைக் குரியவர் மெய்கண்டார் ஆவர். சிவஞான போதத்தை படுத்து மேலும் அத்துறையில் பதின்மூன்று நூல்கள் தோன்றின. இப்பதின்ைகு நூல்களையும் சைவ சிந்தாந்த சாத்திரங்கள்’ என்பர். கஞ்சியர், பெரிய சியர் முதலான வைண ஆச்சாரியர் பலர் தோன்றி ஆழ்வார்களின் நாலா யிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு விரிவான விளக்கவுரைகள் எழுதினர். இவர்தம் உரையால் நுண்ணிய கருத்துகள் பல தெளிவாகக் காணலாம். யோகம், மருத்துவம், சோதி டம் முதலான துறைகளில் தேர்ந்த சித்தர்கள் பதினெண்மர் தாம் வாழ்விற் கண்டு தெளிந்த உண்மைகளையும், அனு பவங்களேயும் பாட்டுகளாக எழுதினர். அவை மறை பொருட் கவிதைகளாக இருப்பினும் காட்டு மக்கள் நெஞ்சில் இன்றளவும் கிலைத்து வாழ்கின்றன.