பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நெஞ்சின் கினேவுகள்

பேராசிரியர், சேவைரையர், நச்சிர்ைக்கினியர், கல்லா டர், தெய்வச் சிலையார் முதலான பெருமக்கள் தொல்காப் பியம் முதலான இலக்கண நூலிற்கும் சங்க இலக்கியங் களுக்கும் தம் மதிநுட்பமெல்லாம் விளங்கத் தெளிந்த உரை கண்டனர். அரும்பதவுரையாசிரியர் சிலப்பதிகாரத் திற்குக் குறிப்புரையும், அடியார்க்கு நல்லார் விளக்கவுரை யும் எழுதினர். மயிலே நாதர் நன்னூலுக்கு விரிவுரை கண் டார். பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர் முதலான பலர் திருக்குறளுக்கு உரை கண்டனர். சமண சமயப் புலவராம் திருமுனைப்பாடியார் “அறநெறிச் சாரம்” என்னும் திே நூலை இயற்றினர். பொய்யாமொழிப் புலவர் தஞ்சைவாணன் கோவை பாடினர். இந்நூல் நானுாறு கட் டளைக் கலித்துறைப் பாக்களைக் கொண்டது; அகப் பொருள் தழுவியது. நம்பியகப் பொருள் என்னும் இலக் கண நூலிற்கு விளக்கமாக எழுந்தது. வடமொழி ஹாலாஸ்ய மகாத்மியத்தைத் தழுவி வேம்பத்துாரார் ஒரு திருவிளையாடற் புராணமும், பரஞ்சோதியார் ஒரு திரு விளையாடற் புராணமும், பெரும்பற்றப் புலியூர் நம்பி ஒரு திருவிளையாடற் புராணமும் செய்தனர். இவற்றுள் பரஞ் சோதியார் இயற்றிய திருவிளையாடற் புராணமே சுவை மிக்கதும் பயில வழங்குவதுமாகும். வில்லிபுத்துாரார் வட மொழி பாரதத்தைத் தழுவித் தமிழில் ஒரு பாரதம் இயற். றினர். அது வில்லிபுத்துாரார் பாரதம்’ என்றே வழங்கு கிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் ஓசைங்யங் கெழு. மிய சந்தப்பாடல்கள் கொண்டதாகும். இவ்விருவர் பாடல் களிலும் இச்சொற் கலப்பு மிகுந்துவிட்டது. மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு இக்காலத்தில் எழுந்ததே.

தனிப்பாடல்களின் காலம் என இதனையடுத்த காலத்

தைச் சொல்லலாம். காளமேகப் புலவர் பாடல்கள் நகைச் சுவை கிரம்பியனவாகும். அவர் ஆசுகவி பாடுதலில் வல்ல