பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலங்தோறும் கன்னித் தமிழ் 27

வர். திருவானைக்காவுலாவும் பாடியவர். இரட்டைப் புல வர்கள் இக்காலத்தவராவர். இவர்கள் இயற்றிய ஏகாம்பர காதருலா இலக்கியப் புகழ் சான்றது. கச்சிக் கலம்பகம், தில்லைக் கலம்பகம் ஆகிய இரு நூல்களும் இவர்கள் பாடி யனவே. தொல்காப்பியத் தேவர் பாடிய திருப்பாதிரியூர்க் கலம்பகமும், திருக்குருகைப் பெருமாள் கவிராயர் பாடிய மாறனகப் பொருளும், மாறனலங்காரமும் இயற்றினர். அதி வீரராம பாண்டியரின் கைடதம் புலவர்க்கு ஒளடதம்’ எனப்படுவது. வீர கவிராயரின் அரிச்சந்திர புராணம் உணர்ச்சியோட்டம் மிக்கதாய், எளிய இனிய செய்யுட்களில் அமைந்தது. ஏடாயிரங்கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகராம் அந்தகக்கவி வீரராகவ முதலி யாரின் தனிப்பாடல்கள் நயம் மிக்கன; சுவை மிக்கன. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இக்காலத்தே தருமபுரம், திருவாவடுதுறை: திருவண்னமலை, துறைமங்கலம் முதலிய மடங்கள் புலவர் பெருமக்களைப் போற்றிப் புரந்து சிறந்த நூல்கள் பல வெளிவரப் பெருங் தொண்டாற்றின. குமரகுருபரரின்

மீட்ைசி இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், கந்தர் கலிவெண்பா, பண்டார மும்மணிக்கோவை, சகலகலா வல்லி மாலை முதலாயின. தமிழிலக்கியத்தின் தனிச்சொத்து களாகும். இவரே பதினேழாம் நூற்றாண்டின் தனிப் பெரும் புலவர். கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப் படும் சிவப்பிரகாசர் ஒரு வீர சைவர். இவர் நால்வர் நான் மணிமாலை, பிரபுலிங்க லீலை முதலிய நூல்களின் ஆசிரிய ராவர். பதினெட்டாம் நூற்றாண்டின் பெரும்புலவர் இவரே என்பர் அறிஞர். சைவ எல்லப்ப காவலரின் திருவருனேக் கலம்பகம், பிள் ளேப் பெருமாள் ஐ பங்காரின் அஷ்டப் பிரபந்தம், படிக்காசுப் புலவரின் தொண்டை