பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கெஞ்சின் நினைவுகள்

மண்டல சதகம், கல்லாப் பிள்ளையின் பாரதம் முதலியன இக்காலப் பகுதியில் எழுந்த குறிப்பிடத்தக்க நூல்க

ளாகும்.

சமயத் துறையில் தத்துவக் கருத்துகளை இனிமை யுடனும் எளிமையுடனும் எடுத்தியம்பிய தாயுமான தயா பரர், இரக்கம் என்பது ஒரு பொருளாய் வந்த வள்ள லார் முதலானேர் தமிழிலக்கியவரலாற்றிற் சிறப்பிடம் பெறத் தக்கவர்கள். |

தமிழிலக்கியவரலாற்றைப் பல சமயங்களைச் சார்ந்த புலவர்களும் வளர்த்துள்ளனர். உமறுப்புலவரின் சீருப் புராணம், குணங்குடி மஸ்தான் சாகிப்பின் பாடல்கள், சர்க்கரைப் புலவர் பாடிய அந்தாதி, பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள், வண்ணக் களஞ்சியப் புலவர் பாடிய முகை யதின் புராணம், நயின முகம்மதுப் புலவரின் முகைதீன் மாலை முதலியன முக்கியமான சில நூல்களாகும்.

ஐரோப்பியர் தம் சமயம் பரப்பத் தமிழகம் போக் தனர்; தமிழ் கற்றனர்; நூல் இயற்றினர். வீரமாமுனிவரின் தேம்பாவணி, சிறந்ததோர் இலக்கியப் படைப்பாகும். தமிழ்க் கிறித்தவர்களுள் வேதநாயகம் பிள்ளே குறிப்பிடத் தக்கவர். அவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் புதினத்துறைக்கு அடித்தளமிட்டது, கிருஷ்ணப் பிள்ளை யின் இரrண்ய யாத்ரிகம் ஒரு பக்திப் பனுவல்.

திரி கூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி. குறவஞ்சி நூல்களில் தலையாயது. “வான ரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும், மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்’ என்னும் பாடலை மறக்க முடி யுமா? அதுபோன்றே முக்கூடற்பள்ளு நூலில் வரும்

ஆற்றுவெள்ளம் காஅளவரத் தோற்றுதே குறி, மலேயாள

பின்னல், ஈழ மின்னல் சூழ மின்னுதே’ என்னும் பாட்

s

|

s

/