பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலங்தோறும் கன்னித் தமிழ் 29

டின் ஒலிகயத்தில் மனத்தைப் பறிகொடுக்காமல் இருக்க முடியுமா?

இனி, இருபதாம் நூற்றாண்டை நோக்குவோம். அன் னியர் ஆட்சியில் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலையில் பாட்டுக்கொரு புலவன் பாரதி தோன்றி நாட்டு மக்களைத் தட்டியெழுப்பி நற்றமிழ்க் கவிதைகளை நல்கின்ை. தனித் தமிழில் எழுத முடியும் என நூல்களை எழுதிக் காட் டிர்ை மும்மொழி வல்ல தமிழ்க்கடல் மறைமலையடிகள் . அரசியலிலும் எளிய தமிழிற்கு இடங் தந்தவர் தமிழ்த் தென்றல் திரு. வி. க. ஆவர். பண்டிதத் தமிழைப் பாமரத் தமிழாக்கியவர் அறிஞர் அண்ணு ஆவர்.

ஏட்டுச்சுவடி தேடிச் சங்க நூல்களைத் தமிழிற்குத் தந்தவர் டாக்டர் உ. வே. சா. சிறுகதைத் துறையில் சிறந்து கின்றவர்கள் புதுமைப்பித்தனும், கு. ப. ராச கோபாலனுமாவர். புதினத்துறையில் பொலிந்து சிறந்தவர் கல்கியும் மு. வ. வும் ஆவர். கவிமணியும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வாழும் கவிதைகளை வளமுறத் தந்து சென்றனர்.

இன்று தமிழ் பல துறைகளிலும் பாங்கு ற முன்னேறி வருகின்றது. காலங்காலமாகக் கன்னித் தமிழ்ப் பேராறு தொடர்ச்சியருது ஒடிக்கொண்டேயுளது. கித்த கித்தம் புத்தம் புதுமலர்கள் பூத்துக் குலுங்கித் தமிழ் இலக்கிய வரலாற்றுச் சோலையை வளப்படுத்தி நிற்கின்றன.