பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையின் சிறப்பு

துழைவாயில்

அகம் புறம் என்ற பாகுபாடு தமிமுகம் கண்டது . தமிழர்க்கே உரியது. தமிழர்தம் இரு கண்களெனக் துலங்கியபோதும் ஆழ்ந்து நோக்கும்போதும் புறத்தைவிட அகமே தலைமை இடம்பெற்றுத் திகழ்ந்தமை புலகிைறது. தலைமை இடம்பெற்ற இவ்வகத்திணையின் தகைமை பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். புலனெறி வழக்கம்

அகத்திணை இலக்கியங்கள் நாடக வழக்கினுலும், உலகியல் வழக்கிலுைம் ஆகிய புலனெறி வழக்கத்தால் இயன்றவை. இவற்றில் அமைந்திருக்கும் கிகழ்ச்சிகள் உண்மையே. கற்பனை கலந்து பாடப்பட்ட இலக்கியம் எனினும் இவற்றில் இடம்பெறும் தலைமகன், தலைமகள், கோழி, செவிலி, நற்றாய் முதலியோர் அனைவரும் மரபுவழிப் பட்டவர்களே. இவை வாழ்க்கையின் உண்மை நிகழ்ச்சி களைக் கருவாகக் கொண்டு தலைமகன் முதலிய பாத்திரங் களைக் கொண்டு முதல் கருப்பொருட்களின் பின்னணியில் விளக்கப்படும் நாடகப் பாங்கானவை. புற உணர்ச்சிப் பாடல்கள்

அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் தனி ஒருவரின் முயற்சியில்ை முகிழ்த்தவை அன்று. பல புலவர்களின்