பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையின் சிறப்பு 31’

உள்ளங்களை இவற்றில் காண்கின்றாேம். ஆல்ை இவை அனைத்தும் புற உணர்ச்சிப் பாடல்கள். புலவர்களின் உள்ளங்களை வெளிப்படுத்துவன என்றாலும் அவர்தம் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் அவற்றில் காண முடிவ தில்லை. புலவர்கள் மறைந்து கின்று தங்கள் உணர்ச்சிகளைக் கற்பனை மாந்தர்களின்வழி வெளிப்படுத்துவதால் புறத் திணைப் பாடல்களைப்போல் அகத்திணைப் பாடல்களில் பாடும் புலவர்தம் உணர்ச்சிகளைக் காணமுடிவதில்லை. அவர்தம் கற்பனை மாந்தர்களின் உணர்சிகளாகவேதான் காண முடிகிறது.

பொதுமை உணர்வு

புலவர்தம் கற்பனை உணர்ச்சிகளாக இல்லாமல் கற்பனை மாந்தர்களின் உணர்ச்சிகளாகக் காணப்படுவதால் தான் இவை தாம் தோன்றிய கால கட்டத்திற்கோ, ஒர் இனத்தவர்க்கோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ உரியனவாகக் காணப்படாமல் உலகத்தவர்க்கே பொது வான உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. இந்த ஒருமைத்தன்மை அகத்திணை இலக்கியங்களுக்கே உரிய தனி இயல்பாகும்.

வாழும் இலக்கியம்

அகத்திணை இலக்கியங்கள் ஒரு கால கட்டத்தில் தோன்றி மறைந்துவிட்ட இலக்கியங்களாகக் காணப் படவில்லை. தொல்காப்பியனரின் காலத்திற்கு முன்பே தோன்றிலுைம் இன்றும் இனியும் வாழும் வகை சான்றனவாக இவ்வகத்தினை இலக்கியங்கள் காணப்

படுகின்றன.