பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.3之 நெஞ்சின் நினைவுகள்

“நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதரவிட்ட நுமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட்டாங்கு பறையறைந்து அல்லது செல்லற்க வென்ன இறையே

தவறுடையான்” -கலி: 56; 30-35. என்னும் சங்ககாலக் கலித்தொகைத் தலைமகன் கூறிய கூற்றினையேதான் இருபதாம் நூற்றாண்டுத் தலைமகனும் கூறுகின்றான்.

‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி’ இவ்விருபதாம் நூற்றாண்டுத் தலைமகனின் பாட வில் அக் கால அகத்திணை மரபுகள் பின்பற்றப்படாமலிருக்கலாம். ஆனல் அந்தத் தலைமகனின் உணர்ச்சிகளையேதான் இந்த நூற்றாண்டுத் தலைமகனும் வெளிப்படுத்துகின்றான். இது போன்றே இன்றைய காதல் பாடல்கள் கூறும் முறை யாலும் அமைப்பாலும் வேறுபட்டபோதிலும் வெளிப் படுத்துகின்ற உணர்ச்சிகள் ஒன்றாகவே காணப்படுகின்றன. இப்படித் தாம் தோன்றிய காலத்துத் தாம் வெளியிட்ட உணர்ச்சியையே பல நூறு ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பும் வெளிப்படுத்தும் பாங்கினை இவ்வகத்திணை இலக் கியங்களிலேதான்காண முடிகிறது.

வாழ்க்கை இலக்கியம்

அகத்திணை இலக்கியம் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பது. எனவேதான் வாழ்க்கையின் அடித்தள

மக்களையும், மேல்மட்டத்தில் இருக்கும் மக்களையும் ாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டுள்ளது. செல்வ