பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையின் சிறப்பு 33;

கிலையில் இருக்கும் மாந்தர்களை மட்டும் அன்றி வினவலர், அடியோர், குறவர், பரதவர், இடையர், உழவர் என்றின்ன பிறரையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு இலங்குகின்றது. --

காதல் உணர்வுகளே, காதல் தொடர்பான நிகழ்ச்சி களைக் காட்டும் இவ்அகத்திணை இலக்கியங்கள் காதலின் வெற்றியைப் பாடுவதோடு மட்டும் அமையாமல் தோல்வி யையும் பாடுவது இவ்வகத்திணை இலக்கியங்களுக்கே உரிய தனிச்சிறப்பாகும். வெற்றியை மட்டுமே இவ்விலக்கியங்கள் உணர்த்தியிருக்குமேயெனில் இவை பலரால் போற்றப் படும் பெற்றியை இழந்திருக்க நேரிட்டிருக்கலாம்.

“யாரும் இல்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்குங் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.

-குறுங் : 25.

என்ற அகத்திணேப் பாடல் காதலில் தோல்வியுற்ற காரிகை ஒருத்தியின் அவலக்குரலே எதிரொலித்து கிற்கின்றது.

“நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதரவிட்ட நுமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட்டாங் கு பறையறைந்து அல்லது செல்லற்க வென்ன இறையே

தவறுடையன்’ -கலி: 56; 80.35.

.

என்ற தலைமகன் கூற்றில் தலைமகளின் காதலைப் பெருமல் கலங்கும் காளையின் அவலக்குரலைச் செவிமடுக்கின்றாேம்.