பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நெஞ்சின் கினைவுகள்

“கிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள பின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனெடு நட்பே’

-குறுங்: 3.

என்ற பாடல் காதலில் வெற்றி பெற்ற கன்னி ஒருத்தியின் உள்ளத்தைப் படம்பிடித்து கிற்கின்றது.

‘மாலை முன்றிற் குறுங்காற் கட்டில்

மனையோ டுணவி யாகப் புதல்வன் மார்பி னுாரு மகிழ்நகை யின்பப் பொழுதிற் கொத்தன்று மன்னே மென்பிணித் தம்ம பாணன தியாழே’

-ஐங்: 410.

என்ற பாடல் கற்பு வாழ்வின்-குடும்ப வாழ்வின் வெற் றியை உணர்த்தி கிற்கிறது. குடும்ப வாழ்வின் வெற்றியை உணர்த்துவதோடு அமையாமல் அங்கே உருவாகும் சில சிக்கல்களேயும் சித்திரிக்கும் போக்கினையும் இவற்றில் காண முடிகிறது.

‘வேம்பின் பைங்கா யென்தோழி தரினே

தேம்பூங் கட்டி யென்றனிர் இனியே பாரி பறம்பின் பணிச்சுனைத் தெண்ணிர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றணிர் ஐய வற்றால் அன்பின் பாலே’

-குறுங்: 196.

என்ற பாடல் கற்பு வாழ்வில் ஏற்ற ஏமாற்றத்தின் சாயலைச் சாற்றுகிறது. *