பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையின் சிறப்பு 85

இப்படிக் காதல் வாழ்வின் இருபுறங்களையும் காட்டி கிற்கும் இவ்வகத்திணை இலக்கியங்கள் வாழ்க்கையில் காதல் மாந்தர்கள் ஆற்ற வேண்டிய கடமையை அறிவுறுத் தவும் தவறவில்லை. அகத்திணை மாந்தர்கள் காதல் வாழ் வில் கினைத்தபோதும் கடமையை மறக்காத செம்மல்க னாகத் துலங்கிய பான்மையினை,

‘தங்கடன் கிறீஇய ரெண்ணி யிடங்தொறும்

காமர் பொருட்பிணிப் போகிய காமவெங் காதலர்’

-குறுங்: 455, 6-8.

‘அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேனரைத் தெருதலும் புரிவமர் காதலின் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றகங் காதலர்’

-கலி: 11; 1.4.

“வினையே ஆடவர்க் குயிரே”

-குறுங் 135; 1. என்ற பாடற்பகுதிகள் புலப்படுத்தி கிற்கின்றன.

இப்படி வாழ்க்கையின் திறம் அனேத்தையும் தம்முன் பொதிந்து வைத்திருக்கும் பாங்கினை அகத்திணை இலக்கி யங்கள் பெற்றுள்ளன.

ஏற்றத்தாழ்வு இன்மை

அகத்திணை இலக்கியங்கள் ஒத்த அன்புடைய தலை மகன் தலைமகள் இவர்தம் அன்புவாழ்க்கையைப் படம்பிடிப் பனவாகவே உள்ளன. அன்பே காதல் வாழ்விற்கு அடிப் படையாகக் காணப்படுகிறது. ஏழ்மையோ, செல்வமோ, சாதி, சமயமோ அவர்கள் காதல் வாழ்விற்கு இடையூறு