பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கெஞ்சின் கினைவுகள்

விளைவிப்பனவாக இல்லை. செல்வ மகள் ஒருத்தி ஏழை மகன் ஒருவன மணந்து வறுமையில் வாடுகின்ற காலத்தும் இன்ப வாழ்வு-அன்பு வாழ்வு நடாத்தும் பாங்கினே இவ்வகத்தினை இலக்கியங்கள் காட்டுகின்றன.

‘பிரசங் கலத்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அளிகரைக் கூந்தல் செம்முது செவிலியர்

பரிமெலிங் தொழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்னுஞ் சிறுமது கையனே’

-ஈற்: 110. என்ற பாடலும்.

  • அன்னுய் வாழிவேண் டன்னாம் படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு உவலைக் கூவற் கீழ் மானுண் டெஞ்சிய கலுழி நீரே’

-ஐங்: 208.

என்ற பாடலும் வறுமையிலும் செம்மை வாழ்வு கடாத் திய பாங்கினைப் பகர்கின்றன.