பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையின் சிறப்பு 37

கயமை கடியப்படல்

“தீயோரைக் காட்டுவதில் தீமை இல்லை. அவர் களின் வாழ்க்கையை அழகுறப் படைத்துக் காட்டலாம். திறம்படக் காட்டலாம். ஆனல் அந்த வாழ்க்கை கவர்ச்சி உடையதாகக் காட்டப் படலாகாது. விரும்பத்தக்கதாகக் காட்டப்பட லாகாது. கொலைஞரையும், கொள்ளைக் கூட்டத் தாரையும் கற்பனையில் படைத்துக் காட்டுவ திலும் கலைஞரின் திறமை போற்றத்தக்கதாகும். ஆல்ை கொலையும் கொள்ளையிடலும் வெறுக்கத் தக்கன என்று பிறர் உணருமாறு காட்டல்

H Fi F

வேண்டும்.

என்பர் டாக்டர் மு. வ.

ஆல்ை அகத்திணே இலக்கியத்தில் தீயோரைக் காண முடிவதில்லை. தலைவன் தலைவியரிடையே அமைந்த அன்புப் பாலத்தை முறிக்க முயலும் தீயவர்களை அங்குக் காண முடியவில்லை. தற்காலத்தைப் போன்று சமயம், சாதி முதலியவற்றைக் காட்டி அவர்தம் அன்பிற்கு அணை போடும் கொடியவர்களுக்கு அகத்திணை இலக்கியத்தில் இடம் இல்லை. காதல் வாழ்வில் ஈடுபட்ட தலைமக்கள் தோல்வியடைந்ததாகக் காணப்பட்டபோதிலும் அவர்கள் வாழ்விழந்து துன்புறுவதாகச் செய்தி இல்லை. காதல் தோல்வியில் தலைமக்கள் உயிரிழந்ததாகக் குறிப்பில்லை.

பரத்தமை கடியப்படல்

தலைமகன் பரத்தையர்ச் சேறலைத் தொல்காப்பியமே சொல்லுவதால் அவற்றைச் சமுதாயம் பரத்தமை ஒழுக் கத்தைக் கண்டித்ததாகக் கொள்வதற்கில்லை என்பர், ஒரு சிலர். தொல்காப்பியத்தை ஆழ்ந்து நோக்கும்போது தொல்

3